ஜம்மு- காஷ்மீரில் அனந்தராக் மாவட்டம் பகல்ஹாமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் மூலம் பதிலடி தாக்குதலை நடத்தியது. அந்த தாக்குதல் குறித்து விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் தெரிவித்ததாவது, நாட்டின் பாதுகாப்பு நலன் கருதி பயங்கரவாதத்தை அழிப்பது என்பது பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு அங்கமாகும். எனவே பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் இருப்பிடங்கள் மீது இந்திய ராணுவம் மேற்கொண்ட தாக்குதல் நாட்டின் முக்கியமான தேவை.

இருப்பினும் இந்த நடவடிக்கையானது போராக மாறிவிடாமல் தடுக்க வேண்டும் நாட்டின் அமைதியை பாதுகாக்க வேண்டும். நீடித்த அரசியல் தீர்வுகளை நோக்கிய ராஜதந்திர  நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய தேவை உள்ளது என்பதை வி.சி.க சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளது.

பயங்கரவாதிகளின் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் நமது நாட்டில் உள்ள இஸ்லாமிய குடிமக்கள் மீதான வெறுப்பாக மாறிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என மத்திய அரசாங்கத்தை வி.சி.க கேட்டுக்கொள்கிறது என தெரிவித்துள்ளார்.