
மத்திய பிரதேசம் மாநிலம் ஜபல்பூர் பகுதியில் ஸ்ரத்தா தாஸ் (21) என்னும் பெண் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். அதே பகுதியில் வசித்து வரும் இஷிதா சாகு (22) என்பவர் இவரின் நெருங்கிய தோழி ஆவார். இவர்கள் இருவரும் பள்ளி காலத்திலிருந்தே நண்பர்களாக இருக்கின்றனர்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இவர்கள் இருவருக்கும் இடையே சிறிய பிரச்சனை காரணமாக பிரிவு ஏற்பட்டது. அப்போது ஸ்ரத்தா தாஸ் இஷிதாவுடன் பேசாமல் இருந்துள்ளார். இதைத்தொடர்ந்து சம்பவ நாளில் இஷிதா, ஸ்ரத்தாவிடம் “உன்னை சந்திக்க வேண்டும்…உனக்காக ஒரு சர்ப்ரைஸ் வைத்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
அதனை நம்பிய ஸ்ரத்தா தன் வீட்டு வாசலின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இஷிதா திடீரென தான் மறைத்து வைத்திருந்த ஆசிடை ஸ்வேதா மீது வீசிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார். அதில் அவரது முகம் மற்றும் உடலில் தீக்காயங்கள் ஏற்பட்டதால் வலியில் அலறினார்.
அவரது அலறல் சட்டத்தை கேட்ட அவருடைய பெற்றோர் வெளியே வந்து பார்த்தபோது அவர் மீது ஆசிட் வீசியது தெரியவந்தது. உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கபட்டு வருகிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தோழி மீது ஆசிட் வீசிய இஷிதாவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.