
இணையதளத்தில் ரோகன் மெஹ்ரா என்பவர் வெளியிட்ட பதிவு தற்போது வைரலாகி வருகிறது. இந்தப் பதிவில், அவர் தனது வீட்டின் சமையல்காரர் மற்றும் அவரது மனைவிக்காக கார் rapidoவில் முன்பதிவு செய்ததாகவும். அந்த ரேபிடோ ஓட்டுநர் பெயர் விகாஸ். அவர் தனது சமையல்காரரையும், அவரது கர்ப்பிணி மனைவியும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால் செல்லும் வழியிலேயே அந்தப் பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டு காரிலேயே ஆண் குழந்தை பிறந்துள்ளது. பிரசவ வலியில் துடித்த பெண்மணிக்கும் அவரது கணவருக்கும் கார் ஓட்டுநர் மிகவும் உதவியாக இருந்து தாயையும், குழந்தையையும் பத்திரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
மேலும் மருத்துவமனையில் அவர்களைக் கொண்டு சேர்த்த பின் பயன்பாட்டில் காட்டப்பட்ட தொகையை மட்டுமே வாங்கியுள்ளார் கூடுதல் பணமோ, வேறு ஏதும் வெகுமதியோ கேட்கவில்லை என பதிவிட்டிருந்தார். மேலும் அவரது மனிதாபிமானத்தை எண்ணி பெருமைப்படுவதாகவும், அந்த ஓட்டுனருக்கு நன்றி கடனாக ஏதாவது செய்ய விரும்புகிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.
அந்தப் பயணத்தின் போது உதவிய ஓட்டுனரை rapido இணை நிறுவனர் பவன் குண்டுபள்ளி கண்டுபிடித்து தகவல் தெரிவிக்க உதவுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த பதிவுடன் அந்த ஓட்டுநர் பெயர் மற்றும் சவாரி விவரங்களையும் பகிர்ந்துள்ளார். இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி பல பொதுமக்களும் இதனை பாராட்டி வருகின்றனர்.