சி.பி.எம் மாநில குழு உறுப்பினர் ராஜேந்திரன். இவரது மகன் ஆதர்ஷ். ஆதர்ஷ் நேற்று கேரள மாநிலத்தில் உள்ள கொல்லத்தில் இருந்து திருவனந்தபுரம் சென்றுள்ளார். இவர் தனது சொந்த காரில் இரவில் பத்தினம்திட்டா பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக எதிரே வந்த லாரியுடன் நேருக்கு நேர் மோதி உள்ளது. லாரி வேகமாக மோதியதால் காரின் முன் பகுதி முழுவதும் நொறுங்கி உள்ளது.

மேலும் அந்த கார் மோதியதில் வேகமாக சென்று அருகில் உள்ள வீட்டின் முன்பக்க கதவில் இடித்து நின்றது. இதில் சம்பவ இடத்திலேயே ஆதர்ஷ் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்தறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டனர்.

மேலும் காரை ஹைட்ராலிக் கட்டர் மூலம் வெட்டி உள்ளே இருந்த ஆகர்ஷின்  உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசியல்வாதியின் மகன் கார் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.