
குஜராத்தில் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் உணவகங்களில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 10 மாதத்தில் ஒரு பெண் குழந்தை உள்ளது. அந்தக் குழந்தையைக் காண தீபக் குமார் லால்பாபு(30) என்பவர் அடிக்கடி வீட்டிற்கு வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அந்தப் பெண் வழக்கம் போல் வேலைக்கு சென்றுள்ளார். அப்போது வந்த தீபக் வீட்டின் பின்புறத்தில் விளையாடிக் கொண்டிருந்த பச்சிளம் குழந்தையை அழைத்துக் கொண்டு அருகில் உள்ள இடத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு அந்தக் குழந்தையை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் கதறி அழுத குழந்தையின் குரலை கேட்ட பாட்டி, பதறிப் போய் ஓடி வந்து பார்த்தபோது, ரத்தம் கசிந்த நிலையில் குழந்தை அழுது கொண்டிருந்தது.
உடனடியாக அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரது நிலைமை மோசம் அடைந்தது. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் விரைந்து வந்த காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீபக் குமாரை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.