
அரியானா மாநிலத்தில் பரிதாபாத் மாவட்டத்தில் உள்ள பகுதியில் உள்ள குடியிருப்புக்கு ஷமன், விஜயகுமார் என்பவர் காவலாளியாக வேலை பார்த்து வந்தனர். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது தெருவில் விகாஸ் என்ற இளைஞர் நடந்து சென்றுள்ளார். அந்த இளைஞரை திருடன் என்று நினைத்த காவலாளிகள் இரண்டு பேரும் சேர்ந்து இளைஞரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் இளைஞர் துடித்துடித்து உயிரிழந்தார். இது குறித்த தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இளைஞரை அடித்துக் கொன்ற காவலாளிகள் இரண்டு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பாகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.