செய்தியாளர்களிடம் பேசிய திண்டுக்கல் லியோனி, அண்மையில் நடைபெற்ற மருது சகோதரர்களுடைய  விழாவில் மேதகு ஆளுநர் ஆர்.என் ரவி அவர்கள் கலந்துகொண்டு,  சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார். அதில் தமிழ்நாட்டை  சேர்ந்த விடுதலைப் போராட்ட வீரர்கள் திராவிட ஆட்சியில்… திராவிட மாடல் ஆட்சியில் இருட்டடிப்பு  செய்யப்பட்டிருக்கிறார்கள் என்ற ஒரு குற்றச்சாட்டு சொல்லி இருக்கிறார்.

குறிப்பாக தமிழ்நாடு பாடல் நூல்களில் தமிழ்நாடு விடுதலை போராட்ட வீரர்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற ஒரு குற்றச்சாட்டை சொல்லி இருக்கிறார்கள் அதற்கு பதில் சொல்வதற்காக தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் சார்பாக தான் இந்த பத்திரிகையாளர்களுடைய சந்திப்பு.

ஆளுநர் அவர்கள் இதே மாதிரி பாடல் நூல்களிலும்,  ஆட்சியிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த விடுதலைப் போராட்ட வீரர்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டு இருக்கிறார்கள்…. புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது ஒரு அடிப்படை ஆதாரம் அற்ற ஒரு பேச்சு,  குற்றச்சாட்டு. அவர் இந்த பாட நூல்களை எல்லாம் வாசித்து, அதன் பிறகு இந்த கருத்தை சொல்லி இருக்க வேண்டும்.

அல்லது பாடநூலை நடத்துகின்ற ஆசிரியர்களை கூப்பிட்டு,  இந்த விபரங்களை எல்லாம் கேட்டுட்டு பேசியிருக்க வேண்டும். எதுவுமே செய்யாமல் பொத்தாம்பொதுவாக அவர் பாட்டுக்கு தமிழ்நாட்டை விடுதலைப் போராட்ட வீரர்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டு இருக்கிறார்கள். விடுதலைப் போராட்ட வரலாறு தெற்கில் இருந்து தான் துவங்க வேண்டும் அப்படின்னு புதுசா இரு அறிய  கண்டுபிடிப்பை அவர் சொல்லியிருக்கிறார்.

ஆனால் தமிழ்நாடு பாடநூல் கழகத்தினுடைய புத்தகங்களில் ஆறாம் வகுப்பு தொடங்கி பதினெட்டாம் வகுப்பு வரை எந்தெந்த விடுதலை போராட்ட வீரர்களுடைய வரலாறுகள் ? எவ்வாறு மாணவர்களுக்கு விளக்கமாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது என்பது நாங்கள் கொடுத்திருக்கின்ற அந்த அறிக்கையில் தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது என தெரிவித்தார்.