
செங்கல்பட்டு மாவட்டம் கொளத்தூர் பகுதியில் கார்த்திக் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவர் சம்பவ நாளில் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் நல்லாமூருக்கு சென்ற நிலையில் தனது மகன் மற்றும் மகளுடன் சாலையோரத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது செய்யூரில் இருந்து வேகமாக வந்து கொண்டிருந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்த நிலையில் கார்த்திக்கின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இந்த விபத்தில் கார்த்திக் மற்றும் அவருடைய மகள் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் பலத்த காயங்களுடன் மகன் உயிர் தப்பினார். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சிறுவனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து கார்த்திக் மற்றும் அவரது மகளின் சடலங்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.