சமூக வலைதளங்களில் பலரும் தெரியாத இங்கிலீஷ் வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரிவதற்கு டிக்சனரியை பயன்படுத்துவர். டிக்சனரி (dictionary.com) சமீபத்தில் 2024லில் பரவலாக தேடப்பட்ட வார்த்தையாக “demure”டெமுர் என்ற வார்த்தையை தேர்வு செய்துள்ளது. 2023 ஆகஸ்ட் முதல் 2024 ஜூலை வரை இந்த வார்த்தையை தவிர வேறு எந்த வார்த்தையும் பரவலாக தேடப்படவில்லை. கடந்த ஆகஸ்ட் மாதம் சிக்காகோவில் வசித்து வரும் லிப்ரான் என்ற பெண் தனது இணையதள பக்கத்தில் தானே மேக்கப் செய்து அதனை வர்ணிக்கும் வீடியோவை வெளியிட்டு இருந்தார்.

இந்த வீடியோவில் அவர் “டெமுர்” என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளார். இதைத்தொடர்ந்து இந்த வார்த்தையை பல பிரபலங்களும் பயன்படுத்தி உள்ளனர். இதனால் இந்த வார்த்தை உலக அளவில் பரவலாக தேடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து டிக்சனரி வலைதளம் “டெமுர்” என்ற வார்த்தையை இந்த ஆண்டுக்கான வார்த்தையாக தேர்வு செய்தது. “Demure” என்ற வார்த்தைக்கான அர்த்தம் அமைதியான மற்றும் பணிவு கொண்ட என்ற பொருளை கொண்டது.