சீனா, ஹாங்காங்கின் தன்னாட்சி உரிமைகளை பாதிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதாக கடந்த 2019 ஆம் ஆண்டு மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தை ஒடுக்குவதற்காக ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தின் மூலம் ஏராளமானோர் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டனர்.

நாடு கடத்தப்பட்டவர்களில் அமெரிக்கர்கள் உட்பட 19 பேர் கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். இந்த நாடு கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி சீனா மற்றும் ஹாங்காங்கை சேர்ந்த 6 அதிகாரிகளுக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது. ஏற்கனவே அமெரிக்கா வர்த்தக வரி உயர்வு மற்றும் தைவான் விவகாரம் என இரு நாடுகளுக்கு இடையேயான உறவில்  விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த பொருளாதார தடைவிதிப்பு இரு நாடுகளுக்கு இடையே மோதல் போக்கை  ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.