
செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சொத்துவரி, மின்சார கட்டண உயர்வு, வீட்டு வரி, பால் வரி, கொழுப்பு பிடித்த இந்த அரசாங்கம்…. கொழுப்பை கூட திருடுகிறது. ஏற்கனவே கொழுப்பாக இருக்கிறது இந்த அரசாங்கம்…. இன்னும் கொழுப்பை திருட வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது ? ஓவர் கொலஸ்ட்ரால் ஆனால் என்ன ஆகும் ? செத்து போய்டுவாங்க… அதனால் கண்டிப்பாக இந்த கவர்மெண்ட் காலி….
கொழுப்பு புடிச்ச அரசாங்கம் ஓவரா கொழுப்பை திருடினால் இந்த நிலைமைதான் வரும். கொழுப்பு திருடி இன்றைக்கு கொழுத்து இருக்கின்றவர்கள்…. லஞ்ச லாவண்யத்தில் திளைத்துள்ளவர்கள்… சட்ட ஒழுங்கை பார்த்தால்…. இன்றைக்கு கடலூரில் போதை பிரச்சினை காரணமாக என்ன பண்ணி இருக்கிறார்கள் ? அம்மாவையே கொன்னு புதைத்து விட்டார்கள். கடலூரில் நடந்தது… அப்போ போதையை ஒழித்து விட்டார்களா? தலை விரிச்சு ஆடிட்டு இருக்கு… வேணும்னே சும்மா
ரீவிவ் மீட்டிங் நடத்தி, போஸ் கொடுப்பதோடு சரி… ரீவிவ் மீட்டிங் தாக்கம் என்ன ? உண்மையிலேயே கட்டுப்படுத்தப்படுகிறதா ? காவல்துறையை சுதந்திரமாகவிடவில்லையே… காவல்துறையை சுதந்திரமா விட்டால் தானே எல்லா பிரச்சனைக்கும் தீர்வு வரும்… சொல்லுறது தலைமை செயலகத்துல இருந்து சொல்லுறீங்க… பில்ட் லெவலில் காவல்துறை போனால்…
காவல்துறையை யார் கட்டுப்படுத்தப்படுகிறது ? வட்டச் செயலாளர் கட்டபடுத்துகிறார்…. ஒன்றிய செயலாளர் கட்டுபடுத்துகிறார்….. நகர செயலாளர் கட்டுப்படுத்துகிறார்…. பேரூர் செயலாளர் கட்டு படுத்துகின்றார்… மாவட்ட செயலாளர் கட்டுப்படுத்துறாரு என தெரிவித்தார்.