சென்னை மாநகராட்சியில் பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு இடங்களில் நீர் தேங்கி இருந்தது. இதனை தமிழ்நாடு அரசு உடனுக்குடன் செயல்பட்டு மோட்டார் மூலம் நீர் தேங்குதலை அகற்றியது. இது குறித்து ஆளுநர் ஆர்.என். ரவி தமிழ்நாடு அரசு மீட்புப் பணிகளை சிறப்பாக செய்கிறது என பாராட்டினார். மேலும் மழையினால் ஏற்பட்ட பாதிப்புகளை தொடர்ந்து சரி செய்து வருகிறது என கூறினார்.

தமிழக அரசின் மீட்பு பணிகளை குறித்து அதிமுக அரசு சில கண்டனங்களை முன்வைத்து வருகிறது. வடசென்னை பகுதிகளில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பார்வையிட்டார். பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் அவர் கூறியதாவது, சென்னையில் தொடர்ந்து நீர் தேங்காமல் இருப்பதற்கு காரணம் மழை குறைவாக பெய்ததால் தான். தமிழ்நாடு அரசு அறிக்கை படி இல்லை எனக் கூறினார். ரெட் அலர்ட் கொடுத்த நாளில் அதிக கன மழை பெய்திருந்தால் திமுக அரசு திணறி இருப்பார்கள்.

இதேபோன்று அம்மா உணவகத்தில் இலவச உணவு என அறிவித்திருந்தனர். 300 பேருக்கு மட்டுமே உணவு இருந்தது. மதியம் 12 மணிக்கே உணவகத்தை மூடி விட்டு சென்று விட்டனர். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொகுதியிலேயே பல இடங்களில் நீர் தேங்கியுள்ளதாக மக்கள் கூறியுள்ளனர். இந்த செயல்களுக்கு ஆளுநரும் பாராட்டு தெரிவித்துள்ளார். ஆளுநரும், திமுக அரசும் ஒன்றிணைந்து விட்டனர். மு.க. ஸ்டாலின் ஆளுநரிடம் பேசி இருப்பார் அதனால் ஆளுநர் கவனிக்காமல் இருப்பதாக ஜெயக்குமார் குற்றம் சாட்டினார்.