
உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோவில் திருமணம் ஆன 2 வாரத்தில் மனைவி 5 மாத கர்ப்பிணியாக இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து அறிந்த கணவர் ஒன்றும் புரியாத நிலையில் மனைவியிடம் கேட்டபோது, திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், சில மாதங்களுக்கு முன் அப்பெண்ணின் சகோதரர், அப்பெண்ணை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகவும், இதுகுறித்து தனது பெற்றோரிடம் கூறிய போதும் அவர்கள் யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டி உள்ளதும் தெரியவந்தது.
இதனால் தான் கர்ப்பம் அடைந்ததாக கணவரிடம், மனைவி தெரிவித்துள்ளார். இது குறித்து தற்போது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அப்பெண்ணின் சகோதரரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.