உத்திரபிரதேசம் மாநிலம் மீரட் நகரில் உள்ள ஜாகிர் காலணியில் நேற்று கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் 14 பேர் சிக்கி உள்ளனர்.இ துகுறித்த செய்தி அறிந்த தேசிய மீட்பு படையினர் மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்புத் துறையினர் ஆகிய குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணிகளை தொடங்கினர் .

இதில் இரவு முழுவதும் மீட்பு பணியில் ஈடுபட்ட பணியாளர்கள் எட்டு பேரை இடிபாடுகளில் இருந்து மீட்டுள்ளனர். அதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் ஆறு பேரை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.