
சீனாவைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது தோழியிடம் திருமண விருப்பத்தை தெரிவிப்பதற்காக கேக்கில் தங்க மோதிரம் ஒன்றை மறைத்து வைத்து சர்ப்ரைஸ் செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி சிச்சுவான் மாகாணத்தை சேர்ந்த காதலி லியூ வீட்டிற்கு சென்று, பசியுடன் இருந்ததால் தனது காதலன் அன்புடன் கொடுத்த கேக்கை ஆர்வத்துடன் சாப்பிட்டுள்ளார். அவருக்கு உள்ளே மறைத்து வைத்திருந்த சர்ப்ரைஸ் மோதிரம் குறித்து தெரியாததால், மோதிரத்தையும் நன்றாக கடித்து மென்று உள்ளார். அது ‘வேற்று பொருள்’ என்று உணர்ந்த அவர் அதனை துப்பியுள்ளார்.
அதன் பின் அவரது காதலன் தன்னை ஆச்சரியப்படுத்தும் நோக்கில் இந்த கேக்கை தயார் செய்ததாகவும், காதலி கடித்து துப்பிய பொருள் தங்க மோதிரம் என்றும் தெரியவந்தது. தனது காதலிக்கு சர்ப்ரைஸ் செய்ய நினைத்தது இறுதியில் நகைச்சுவையாக முடிந்தது. இதனை சமூக ஊடகங்களில் பகிர்ந்த லியூ கவனம் அனைத்து ஆண்களே: உணவில் திருமணம் மோதிரத்தை ஒருபோதும் மறைக்காதீர்கள் என்று தலைப்பில் வெளியிட்டுள்ளார். இது உண்மையிலேயே மிகவும் மறக்க முடியாத நினைவாக இருந்தாலும் இறுதியில் இருவரும் திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.