திமுக இலக்கிய அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி,  இப்போ பெரியார் சிலை மீது கை வைக்க ஆரம்பிச்சுட்டான். பெரியாரைத் தொட்டவன் கேட்டான், அது வேறு விஷயம். ஆனால் தெரியாமல் சில பேர் பெரியாரை தொட்டு பார்க்கிறார்கள்.  இன்றைக்கு கூட அண்ணாமலை பேசியிருக்கிறார்…  பெரியாருடைய சிலையை…. அவருடைய ”அந்த வாசகம்” பெயரை  சொல்லாமல்…  பெரியார்ன்னு சொல்றதுக்கு வாய் வரல…  எவ்வளவு நன்றி உள்ளவன் பாருங்க…

அவர்  படித்து பட்டம் பெற்று,  ஐபிஎஸ் ஆனானா அதற்கு காரணமே  பெரியார் இல்லைன்னா…  அவர்  எல்லாம் வந்து இருக்கவே முடியாது….  காக்கி சட்டையை பார்த்திருக்க முடியாது… ஆடு தான் மேச்சி இருக்கணும். ஆடு மேய்ப்பவனை எல்லாம் ஐபிஎஸ் ஆக்குவது தந்தை பெரியார் என்பதை மறந்துவிடக்கூடாது.

அந்த பெரியாரின் சிலையை உடைப்பேன் அப்படின்னு பேசுறாங்க…. அதுவும் ஸ்ரீரங்கத்து கோவிலுக்கு முன்னாடி இருக்கிற சிலையை பற்றி பேசுகிறார்….  அதன் வரலாறு தெரியுமா அண்ணாமலைக்கு ? 2006ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 7ஆம் தேதி தந்தை பெரியாரின் உடைய சிலையை நம்முடைய ஒப்பற்ற  தலைவர் கலைஞர் அவர்கள் திறந்து வைக்க இருக்கிறார்.

முந்தைய நாளில் பெரியார் சிலையை உடைச்சுட்டாங்க ஸ்ரீரங்கத்தில்….  வெண்கலத்தில் செய்யப்பட்ட சிலை அல்ல…. அந்த  சிமெண்ட் சிலையை உடைத்து விட்டார்கள்..  இரவோடு இரவாக உடைத்து  விட்டார்கள்…  முதலமைச்சராக இருந்த கலைஞருக்கு அந்த செய்தி வருகிறது…

தன்னுடைய விரலில் இருந்த குண்டூசியால் குத்தி ரத்தம் வர வைத்து, தி.கா கொடியை உருவாக்கியவர் நம்முடைய தலைவர்…  அவர் முதலமைச்சராக உட்கார்ந்திருந்த போது கூட நான் எதற்கு சொல்கிறேன் என்றால்,  அந்த உணர்வு…  பெரியாரின் சிலையை உடைத்து விட்டார்கள்  என்று சொன்னவுடன்,  குறிப்பிட்ட அந்த நேரத்துக்குள் வெண்கல சிலை வைத்து,  குறிப்பிட்ட அதே டிசம்பர் மாதம் 7ஆம் தேதி பெரியாரின் சிலையை ஸ்ரீரங்கம் கோவிலுக்கு முன்னால் திறந்து வைத்தவர் தான் கலைஞர்  தெரிவித்தார்.