
நடிகர் ரஜினிகாந்தின் 170 வது படத்தில் அமிதாப்பச்சன் இணைய உள்ளதாக லைக்கா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி 50 நாட்களைக் கடந்த ஜெயிலர் படத்தின் வெற்றிக்குப் பிறகு ஜெய் பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் இணைவார் என்று அறிவிக்கப்பட்டதிலிருந்து பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருந்தது. அதன் காரணம் ஜெய் பீம் படம் ஆனது சமூகநீதி பேசும் அரசியல் படமாக, வெகுஜன மக்களிடையே நல்ல பாராட்டைப் பெற்ற படமாக இருந்தது.
குறிப்பாக இந்த படம் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்ததையடுத்து சூர்யாவின் நடிப்பும் வெகுவாக பாராட்டப்பட்டது. பல விருதுகளுக்கும் இந்த படமானது பரிந்துரைக்கப்பட்டது. அதற்கு பிறகாக ஞானவேலை அழைத்து ரஜினிகாந்த் பேசிய நிலையில், ஒரு கதை உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும், பிரம்மாண்டமாக உருவாகும் இந்த திரைப்படம் பான் அளவில் இந்தியா முழுமைக்கும் பழமொழிகளில் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டதிலிருந்தே ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பை வைத்து வந்தனர்.
இந்த படம் பெரிய அளவிலான பொருட்செலவில் லைக்கா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. கடந்த இரண்டு நாட்களாக லைக்கா நிறுவனத்தின் தரப்பில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி கொண்டே இருக்கின்றது. தலைவர் 170 என தற்காலிக பெயர் வைக்கப்பட்டிருந்தது. பிறகு இந்தப்படத்தில் நடிக்கும் நடிகர் – நடிகைகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் சார்பட்டா பரம்பரை மூலம் பெரிய அளவில் புகழ் பெற்ற துஷாரா விஜய் இணைவதாக அறிவிக்கப்பட்டது. அதேபோல தற்போது தென்னிந்திய மொழிப்படங்களில் பெரிய அளவிலான வெற்றிகரமாக நடிகராக வளரும் பகத் பாஸில் இணைவார் என்றும், ராணா பசுபதி இணைவார் என்றும் அறிவிக்கப்பட்டது. அதற்குப் பிறகு ரஜினியின் நீண்ட கால நண்பரும், இந்திய அளவிலே சூப்பர் ஸ்டாராக விளங்கக்கூடிய அமிதாப்பச்சன் இணைவார் என தற்போது லைக்கா தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்திருக்கிறது. ரஜினிகாந்தின் 170 வது படத்தில் அமிதாப்பச்சன் இணைய போவதாக லைக்கா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
Welcoming the Shahenshah of Indian cinema ✨ Mr. Amitabh Bachchan on board for #Thalaivar170🕴🏼#Thalaivar170Team reaches new heights with the towering talent of the one & only 🔥 @SrBachchan 🎬🌟😍@rajinikanth @tjgnan @anirudhofficial #FahadhFaasil @RanaDaggubati… pic.twitter.com/BZczZgqJpm
— Lyca Productions (@LycaProductions) October 3, 2023