
இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் போட்டி வருகிற ஜூன் 20ஆம் தேதி லீட்சில் தொடங்குகிறது. இதற்கான 18 இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி மும்பையில் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இதில் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டார். அதோடு ஐபிஎல் போட்டியில் கலக்கி வரும் சாய் சுதர்ஷன், அர்ஷிதீப் சிங் ஆகியோர் உள்ளனர்.
இந்நிலையில் சாய் சுதர்சனை அணியில் சேர்த்ததற்கான காரணம் குறித்து தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார். ஐபிஎல் செயல்பாடு காரணமாக அவரை தேர்வு செய்யவில்லை, இங்கிலாந்து லயன்ஸ் அணி இந்தியாவிற்கு வந்த போது அவர் சிறப்பாக விளையாடினார். உயர்மட்ட திறனை வெளிப்படுத்தும் திறமை கொண்ட பேட்ஸ்மனாக அவர் இருக்கிறார். நாங்கள் அவரை சிறிது காலமாகவே பார்த்து வருகிறோம், அதனால் அவரை தேர்வு செய்தோம் என்று கூறினார்.