
தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டத்தில் மருந்து தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் கடந்த மாதம் 30 ஆம் தேதி திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது மருந்து தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில் சிலர் படுகாயங்களுடன் உயிர் தப்பினர்.
பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்கள் 18 பேரை உடனடியாக காவல்துறையினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த விபத்தில் நேற்று வரை 40 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது சிகிச்சை பெற்று வந்த நபர்களில் ஒருவர் உயிரிழந்ததுள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது. இதனால் வெடி விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்த வெடி விபத்து சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.