
கோவில் சொத்துக்கள் வெளிநாடுகளுக்கு திருடி விற்கப்படுகின்றன என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பகிரங்க குற்றசாட்டை முன் வைத்துள்ளார்.கோயில் சொத்துக்களை விற்கும் பணம் யாருக்கு செல்கிறது என தெரியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். நமது கோவில் சொத்துக்கள் வெளிநாட்டுக்கு சென்று விட்டது என்றும் அவர் கூறியுள்ளார். வெளிநாட்டு அருங்காட்சியகத்தில் இருக்கும் கோவில் சொத்துக்களை ஆச்சரியமாக பார்க்கிறோம்.