
கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற ஐயப்பன் திருக்கோவில் அமைந்துள்ளது. அதன் அருகே மாளிகப்புரம் கோவிலும் அமைந்துள்ளது. இந்த கோவில்களில் மேல் சாந்தியாக பணியாற்றுபவர்களின் பதவிக்காலம் அடுத்த மாதம் 15 ஆம் தேதி முடிவடைகிறது. இதன் காரணமாக 2024 – 25 ஆம் ஆண்டுக்கான சபரிமலை மற்றும் மாளிகைபுரம் கோவில்களுக்கான புதிய மேல்சாந்திகள் தேர்வு நேற்று நடைபெற்றது.
25 பேர் சபரிமலை மேல் சாந்திக்கான போட்டியிலும் 15 பேர் மாளிகப்புரம் மேல் சாந்திக்கான போட்டியிலும் கலந்து கொண்டனர். இவர்களின் பெயர்கள் தனித்தனி சீட்டுகளில் எழுதி கோவிலின் சன்னிதானத்தில் கோவில் பாரம்பரியபடி குழுக்கள் முறையில் தேர்வு தொடங்கியது. இதில் பந்தளம் ராஜ குடும்பத்தை சேர்ந்த சிறுவன் ரிஷிகேஷ் வர்மா சபரிமலைக்கான புதிய மேல் சாந்திக்கான சீட்டை எடுத்தார். இதில் சபரிமலை புதிய மேல் சாந்தியாக அருண்குமார் நம்பூதிரி தேர்வாணர். இதைத்தொடர்ந்து மாளிகப்புரம் மேல் சாந்தியை பந்தளம் ராஜ குடும்பத்தை சேர்ந்த சிறுமி வைஷ்ணவி வர்மா சீட்டை எடுத்தார். அதில் மாளிகப்புரம் மேல் சாந்தியாக வாசுதேவன் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டார். புதிய மேல் சாந்திகள் அடுத்த மாதம் 16ஆம் தேதி பொறுப்பேற்கிறார் மேலும் இவர்களது பணிக்களம் 1 வருடம் ஆகும்.