தர்மபுரியில் உள்ள தங்கவேல் தெருவில் பிரகாஷ் குமார்(54) என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிச்சந்தையில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் 19ம் தேதி அதே பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்த 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இது குறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் நடந்ததை கூற அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து பிரகாஷ் குமாரை மகிளா விரைவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மேலும் காவல்துறை இந்த வழக்கின் புலன் விசாரணையை முடித்து மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இன்று பிரகாஷ் குமாரை குற்றவாளியாக அறிவித்து 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 15,000 அபராதம் விதித்து உத்திரவிட்டார்.