
ராஜஸ்தான் மாநிலத்தின் தவுசா தொகுதியின் எம்எல்ஏவாக இருப்பவர் தீன் தயாள் பைரவா. இவரிடமிருந்து ஒரே மாதத்தில் 3முறை அடுத்தடுத்த பொருள்கள் திருடு போய் உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதாவது கடந்த ஜூன் 11ஆம் தேதி அன்று தவுசா நகரில் நடந்த முன்னாள் மத்திய மந்திரி ராஜேஷ் பைலட்டின் நினைவு தின நிகழ்ச்சியில் தீன் தயாள் கலந்து கொண்டார்.
அப்போது அவருடைய மொபைல் போன் திருடப்பட்டது. இது குறித்து எஃப்ஐஆர் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதன் பின் அவருடைய வீட்டில் இருந்த மோட்டார் சைக்கிள் திருடுபோய் உள்ளது.
இது குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவங்கள் குறித்து தீன் தயாள் கூறியதாவது, வீட்டின் முன்புறம் இருந்த சிசிடிவி கேமராவும் சில மாதங்களாக வேலை செய்யவில்லை. மற்றொரு கேமராவில் எந்த காட்சியும் படம்பிடிக்கப்படவில்லை அதனால் குற்றவாளியை கண்டறிய முடிவதில் மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளது என கூறியுள்ளார்.
மேலும் தனது வீட்டில் டிராக்டர் ஒன்றும் திருடுபோய் உள்ளதாக கூறியுள்ளார். இதுகுறித்து சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரான டிகா ராம் ஜல்லி கூறியதாவது, “பாஜக ஆட்சியில் எம்எல்ஏகளுக்கு கூட பாதுகாப்பு கிடையாது.
சட்ட ஒழுங்கு சீரழிந்து விட்டது. நாட்டில் அங்கங்கே கொள்ளையர்கள், மாபியாக்கள் அச்சமின்றி சுற்றி வருகின்றனர். காவல் நிர்வாகம் இதனை கண்டு கொள்ளாமல் அமைதியாக இருக்கிறது.
ராஜஸ்தானின் முதல் மந்திரி பஜன்லாலின் கையில் உள்துறை இருக்கும்போது கூட இது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன என கண்டனம் தெரிவித்துள்ளார்.