வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் கரையை கடந்த நிலையில் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஆந்திர மற்றும் தெலுங்கானாவில் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனையடுத்து தற்போது மீண்டும் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருக்கிறது. அதாவது ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வருகிற 5-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் வருகிற 8-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று மற்றும் நாளை பல்வேறு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும்  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது‌