சேலம் மாவட்டம் சூரமங்கலம் அருகே உள்ள பகுதியில் நேற்று பட்ட பகலில் மர்ம நபர்கள் சிலர் ஒரு வயதான தம்பதியரின் வீட்டிற்குள் புகுந்து அவர்களை மிக கொடூரமாக தாக்கி படுகொலை செய்யப்பட்டது சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற படுகொலை சம்பவங்களை நினைவுபடுத்துகிறது.

ஏற்கனவே அந்த பகுதியில் நடைபெற்ற கொலைக்கு தொடர்புடைய குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை. இந்த தொடர்ச்சியான கொலைகள் மாநிலத்தில் சட்ட ஒழுங்கு நிலை குறித்த கேள்விகளை எழுப்புகின்றது. இதுகுறித்து இந்திய குடியரசு துணைத் தலைவர் எல்.முருகன் கூறியதாவது, தமிழக காவல்துறை தற்போது அரசியலின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. எனவே முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காவல்துறையினரை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும்.

சட்ட ஒழுங்கு நிலையை சீர் செய்து மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் குற்றங்களை இரும்பு கையால் அடங்கும் அரசாங்கம் என்ற பெயரில் பொதுமக்களுக்கு அலங்காரமான பேச்சுக்களை வழங்குவதில் மட்டும் கவனம் செலுத்தாமல் உண்மையான பாதுகாப்பை வழங்கும் நோக்கில் முதலமைச்சர் நடவடிக்கை மேற்கொள்வது அவசியம் என்றும் கூறினார். மேலும் காவல்துறையினர் இந்த கொலை சம்பவங்களை தீவிரமாக விசாரித்து குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.