பாஜக கட்சி நிர்வாகி குஷ்பூ சமீபத்தில் தமிழக பாஜக குறித்து குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்துள்ளார். இதுகுறித்து தனது இணையதள பக்கத்தில் குஷ்பூ தெரிவித்ததாவது, என்னை பாஜக கட்சி நிகழ்ச்சிகளில் கூப்பிடுவதில்லை. அதனால் நான் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில்லை. தொடர்ந்து என்னை அழைக்காததற்கு காரணம் என்ன என்பதை தமிழக பாஜக கட்சித் தலைவர் அண்ணாமலை, பாஜக நிர்வாகிகளிடம் தான் கேட்க வேண்டும்.

சில சமயங்களில் அழைத்தாலும் கடைசி நிமிடத்தில் அழைக்கிறார்கள். அதனால் செல்ல முடிவதில்லை. கட்சி நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்காததால் நான் கட்சியை விட்டு விலக மாட்டேன். என்னால் முடிந்த அளவுக்கு பிரதமர் நரேந்திர மோடியின் நல்ல திட்டங்களை பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கும் பணியை தொடர்ந்து செய்வேன் என பதிவிட்டுள்ளார்.