
2025-26ம் நிதி ஆண்டிற்கான தமிழக பட்ஜெட் தாக்கல் வருகிற மார்ச் 15 ஆம் தேதி செய்யப்படவுள்ளது. இந்த பட்ஜெட் தாக்கல் தமிழக சட்டசபையில் நடத்தப்பட உள்ளது. இதனால் தமிழ்நாடு அரசு சார்பாக விவசாய மக்களிடம் பட்ஜெட் குறித்து கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.
அதில் விவசாயிகள் விவசாயம் செய்யும் போது உரிழந்தால் ரூ.25 லட்சம் வழங்க வேண்டும் என்றும், 60 வயதிற்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை திட்டத்தைப் போன்று மாதம் 3000 ரூபாய் வழங்க வேண்டும் என்றும், விவசாய விலை பொருட்களை குறிப்பிட்ட நேரத்தில் கொண்டு செல்வதற்காக இலவச பஸ் வசதி மற்றும் இலவச கொரியர் வசதிகள் செய்து தருமாறும் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் உரக்கடை வைக்க மானியம், கரும்பு ஒரு டன்னுக்கு ரூ. 4400 மற்றும் நெல் குவிண்டாலுக்கு ரூ. 3500 என்று சத்திஸ்கர் மாநிலத்தைப் போன்று, இங்கும் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.