என் மண், என் மக்கள்  யாத்திரையில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சகோதர – சகோதரிகளே….. ஒன்பது ஆண்டுகள் மத்திய அரசு கொடுத்திருக்கக் கூடிய பணம் மட்டுமே 10,7600  கோடி ரூபாய். இந்தியாவிலேயே எந்த மாநிலத்திற்கும் கொடுக்காத பணத்தினை நம் பாரத பிரதமர் கொடுத்திருக்கிறது. இதை தாண்டி  நம் பிரதமர் சொன்னார். இன்று உலகம் முழுக்க எனது முதல் வேலை, முக்கியமான வேலை என்னவென்றால் ?

தமிழ்நாட்டினுடைய  கலாச்சாரத்தையும்,  பாரம்பரியத்தையும் உலகம் முழுவதும் எடுத்துச் செல்வது என் முக்கியமான வேலையாக வைத்திருக்கின்றேன்  என்று சொன்னார். பாராளுமன்றத்தின் மைய கட்டிடத்தில் செங்கோலை வைத்திருக்கிறோம். திருக்குறளை உலகம் முழுவதும்  எடுத்துட்டு போகிறோம். தம்பி இங்கே நின்னுட்டு இருக்காரு.

இப்ப தான்  காசி தமிழ் சங்கத்திற்கு உங்க ஊரில் இருந்து தம்பி போயிட்டு வந்தார். வரும்போது  கேட்டேன் காசு தமிழ் சங்கத்திற்கு போயிட்டு வந்தேன் என்று கூறினார். தமிழ் நாட்டில் இருந்து 2500 சகோதர – சகோதரிகளே காசிக்கு அழைத்து சென்று,  தமிழுக்காக காசிலே விழா எடுக்கிறார். சவ்ராஸ்ட்ரா  தமிழ் சங்கம் நடத்துகின்றார் என பேசுமையாக பேசினார்.