தெலுங்கானா ஆளுநராகவும் புதுவை துணை நிலை ஆளுநராகவும் இருப்பவர் தமிழிசை சௌந்தரராஜன். இவர் தற்போது தமிழுக்கும் ஆன்மீகத்திற்கும் தொடர்பு இல்லை என்று கூறுவதை தன்னால் ஏற்க முடியாது என கூறியுள்ளார். அதாவது சீர்காழியில் உள்ள சட்டநாதர் கோவில் கும்பாபிஷேக விழாவில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டார். அதன் பிறகு தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அவர் பேசியதாவது, தமிழையும் ஆன்மீகத்தையும் பிரிக்க முடியாது. ஆன்மீகத்தோடு கூடிய தமிழ் இன்னமும் தமிழகத்தில் பரப்பப்பட வேண்டும். ஆன்மீகத்திற்கும் தமிழுக்கும் சம்பந்தமில்லை என சிலர் கொள்கை ரீதியாக பேசுவது தவறு. தமிழோடு சேர்ந்து ஆன்மீகமும் வளரும். தமிழையும் ஆன்மீகத்தையும் பிரிக்க முடியாது என்ற எண்ணம் மக்கள் மத்தியில் விதைக்கப்பட வேண்டும். நான் என்னுடைய பணியில் சிறிதளவு கூட சுயநலம் இல்லாமல் செய்து வருகிறேன். மேலும் புதுச்சேரியில் இருந்து என்னை வெளியேறச் செல்பவர்கள் பற்றி எனக்கு கவலை கிடையாது என்று கூறினார்.