
செய்தியர்களிடம் பேசிய தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு, நான் ஊரில் இல்ல. எனக்கு தெரியாம பல பிரச்சனை இங்கே ஓடிட்டு இருக்கு. அதனாலதான் அது என்ன பிரச்சனைன்னு தெரிஞ்சா சொல்லுங்க.. யாரோ நேற்று பயங்கரமா… ஆக்ரோஷமா பேட்டி எல்லாம் கொடுத்துட்டு, என் வீட்டு வாசலில் போராட்டம் நடத்த போறேன்…. முற்றுகை பண்ண போறேன்னா… ஆளே காணோம். நானும் வெயிட் பண்ணிட்டு இருந்தேன். யாராவது வருவாங்கண்ணா… ஒருத்தரும் காணோம். என்ன ஆச்சுன்னு எனக்கு தெரியல…
நான் ட்விட்டுக்கு பிரன்ச்சு விளக்கம் தான் சொன்னேன். அந்த அர்த்தத்தில் தான்…. என்னுடைய ட்விட்ல ரொம்ப தெளிவாக ஒரு sarcasm ( கிண்டல் ) இருக்கு. அந்த sarcasm ( கிண்டல் ) எடுத்துக்க முடியலன்னா….. என்னால் ஒன்னும் பண்ண முடியாது. அந்த ட்விட் டிஎம்கேக்கு தான் நான் கொடுத்திருந்தேன்.
அது என்ன ? திடீர்னு காங்கிரஸ்காரங்களுக்கு பொங்கி எழுந்து வராங்க… டிஎம்கேக்கு செய்தி தொடர்பாளர்கள் காங்கிரஸா ? இல்ல டிஎம்கே-க்கு வேலை பார்க்கிறவங்க காங்கிரஸ்ஸா ? எனக்கு புரியவில்லை. கட்சிக்காரங்க பேசுவதில்லை, கூட்டணி கட்சி என்ன அவ்வளவு ஆக்ரோஷமா பேசிட்டு இருக்காங்க, அதான் எனக்கு புரியல என தெரிவித்தார்.