
செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, பன்வாரிலால் புரோகித் கவர்னராக பத்து வருஷம் ஆகப்போகிறது. 2014 அசாம் கவர்னராக ஆகினார். ராஜினாமா செய்ய என்ன காரணம் சொல்லி இருக்காரா ? மாநிலத்தில் டார்ச்சர் பண்றாங்கன்னு சொல்றாங்க… நமக்கு அது தெரியாது. அத பத்தின இன் புட் எதுவும் எனக்கு இல்ல. அதனால கருத்து சொல்ல முடியவில்லை. என்னுடைய நீண்ட கால நெருங்கிய நண்பர்.
நம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் NIA சோதனை நடத்தி, சட்டவிரோத பண பரிமாற்றம் தவற வேறு ஏதும் குற்றசாட்டு உண்டா என்ற கேள்விக்கு பதில் அளித்த பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா,
ஆயுதங்கள் கை பற்றியதாக இன்னைக்கு காலைல செய்தியை பார்த்தேன். ரொம்ப சீரியஸ் நீங்க ஐடியா லாஜிக் என்ன வேணாலும் நிலை எடுக்கலாம். ஆனால் இஸ்யூ. ஆனால் ஆயுதம் எதற்காக ? அது யாருக்கு எதிராக பயன்படுத்த? சில அரசியல் தலைவர்களுக்கு எதிராக பயன்படுத்துவது மாதிரியும் செய்தி வருது. அப்படி வந்ததுன்னா… இது ரொம்ப டேஞ்சரஸ்… அப்படி இருக்கிறத நீங்க ஐடியாலஜிக்கல்லா உங்களுக்கு பிடிக்கல…. திமுகவே பிடிக்காது அவருக்கு….
ஏன்னா இவர் தமிழ் தேசியவாதம், திராவிட வாதத்தை எடுத்துக்கிறவங்க…. அப்படி இருக்கிறது, யாருக்கு எதிராக பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் கலெக்ட் பண்ணி இருக்காங்க, வெடி மருந்து கலெக்ட் பண்ணி இருக்காங்க தெரியாது. NIA குறித்து ஓன்று மட்டும் உறுதியா சொல்ல முடியும். NIA நடவடிக்கையில் சக்சஸ் ரேட் 98%.
அப்படினா… NIA எடுக்கும் 100 கேசுக்கு ஒன்னு ரெண்டு தான் பெயில்… ஆனால் மீது கேஸ் எல்லாமே சக்சஸ் புல்லா பண்ணி இருக்காங்க. அதனால NIA ஒரு நடவடிக்கை எடுத்ததுனால, இதுல கிரவுண்டு இல்லாம இருந்திருக்காது. இன்னைக்கு வந்திருக்கிற செய்தி இதுவரை, துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டுள்ளது. வெடி பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது. என்ன தேவை ? துப்பாக்கி, வெடி மருந்தெல்லாம் எதுக்காக சார் ? யாருக்கு எதிராக பயன்படுத்த ?
இது ஒரு சட்டவிரோத நடவடிக்கைகள் மனதில் இல்லாமல், ஆயுதங்களும் – வெடி பொருட்களும் கலேக்ட் பண்ண மாட்டாங்க. அதனால அது யார் எதிர்த்தாலும், கோர்ட்டுக்கே போறேங்கிறாரு ஒருத்தரு, போகட்டும்… கோர்ட்டுக்கு போய் என்ன பண்ணுவாரு ? வக்கீலே கோர்ட்ல வாதாடெல்லாம், அவ்வளவுதான். அதனால அதை பத்தி இல்ல… எனக்கு NIA மேல முழு நம்பிக்கை இருக்கு என தெரிவித்தார்.