கர்நாடக மாநிலம் குப்பி பகுதியில் ஹஷ்மா என்ற பெண் வசித்து வருகின்றார். இவர் தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருகின்றார். இந்நிலையில் இவர் தனது தோழிகளுடன் மந்தாரகிரி மலைப்பகுதியை சுற்றி பார்க்க சென்றுள்ளார். பின்னர் அங்குள்ள இயற்கை அழகை கண்டு ரசித்த அவர் அதே பகுதியில் இருந்த மிர்த்தாளகரே ஏரியை பார்க்க சென்றுள்ளார். அந்த ஏரியிலிருந்து வெளியேறிய நீர் பாறை இடுக்குக்குள் வழியாக நீர்வீழ்ச்சி போல் ஆர்ப்பரித்து வருகின்றது. இந்த நீர்வீழ்ச்சியை சுற்றுலா வருவோர் கண்டு ரசித்து செல்வது வழக்கம். இதனை போல ஹஷ்மாவும் நீர்வீழ்ச்சி நடுவே உள்ள பாறையில் நின்று செல்பி எடுக்க முயன்றுள்ளார். இதற்காக தனது தோழியையும் அழைத்துள்ளார். இருவரும் அங்கு நின்று செல்பி எடுத்துக் கொண்டிருந்தனர்.

இதனையடுத்து திடீரென ஹஸ்மா கால் தவறி கீழே விழுந்துள்ளார். மேலும் பாறை இடுக்கில் சிக்கிக் கொண்டு உயிருக்கும் போராடிக் கொண்டிருந்தார். இதனை பார்த்த தோழி காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். அந்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் ஹஷ்மாவை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நீர்வீழ்ச்சியிலிருந்து அதிகளவு தண்ணீர் வெளியேறியதால் பாறை இடுக்கில் விழாதபடி மாற்று பாதையில் நீரை திருப்பி விட்டனர். பின்னர் பாறை இடுக்கில் சிக்கிய ஹஸ்மாவை சுமார் 12 மணி நேரத்திற்கு பின்னர் மீட்டுள்ளனர். தற்போது அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது