நாயகன் படத்தை அடுத்து கிட்டத்தட்ட 38 ஆண்டுகளுக்குப் பிறகு மணிரத்தினம், கமல் இணைந்துள்ள படம் தான் தக் லைப். இந்த படத்தில் திரிஷா, அபிராமி, சிம்பு, ஜோஜூ ஜார்ஜ், அசோக் செல்வன் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஜூன் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

அந்த வகையில் மே 20ம் தேதி அன்று மும்பையில் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நடைபெற்றது. அப்போது தக் லைட் படத்தின் OTT ரிலீஸ் குறித்த தகவலை கமல் பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, தற்போது வரை ஒரு படம் திரையரங்குகளில் வெளியாகி 28 நாட்களுக்குப் பின்னர் OTT-யில் வெளியாகிறது. அதனை 4 வாரங்களில் இருந்து 8 வாரங்களாக அதிகரிக்க வேண்டும் என்று பல நாட்களாக திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.

அந்த வகையில் தற்போது தக் லைப் படத்திற்கு அந்த சிறப்பு சலுகையை அளித்துள்ளது OTT நிறுவனம். திரையரங்குகளில் வெளியாகி 56 நாட்களுக்குப் பிறகு அதாவது 8 வாரங்களுக்கு பின்னரே இப்படம் OTT-யில் வெளியாக OTT நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இந்த முடிவை அந்நிறுவனமே முன்வந்து எடுத்ததற்காக நன்றி என்று கூறினார்.

இந்நிலையில் தக் லைப் பட  OTT வெளியீடு 8 வாரங்களுக்கு பிறகு அறிவிக்கப்படும் என்ற முன்னெடுப்புக்காக நடிகர் கமலஹாசனுக்கு தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. இந்த முடிவை அனைத்து படங்களுக்கும் அமல்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.