மகாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியை சேர்ந்தவர்கள் நிலேஷ் தியானேஷ்வர் குடே – ஜெயஸ்ரீ தம்பதி. இந்த தம்பதிக்கு 14 வயதில் சான்வி என்ற மகள் இருந்தார். இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு மூவரும் ஒரே பைக்கில் புனித யாத்திரைக்காக பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் எதிர்பாராத விதமாக SUV கார் ஒன்றுடன் இவர்களது பைக் நேருக்கு நேராக மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.