என் மண், என் மக்கள் பாத யாத்திரையில் பேசிய தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை,  சகோதர – சகோதரிகளே திமுக பற்றி சரியாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால்,  இவர்கள் நம்முடைய நிலத்தை எடுத்து,  அதில் தொழிற்சாலைகளை கொண்டு வந்து…. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுப்பதற்காக இந்த வேலை செய்யவில்லை… எங்கும் கமிஷன்,  எதிலும் கமிஷன்….  தலை உச்சியில் இருந்து உள்ளங்கால் வரை எல்லா இடத்திலும் ஊழல்….  ஊழல்…  ஊழல் என்பது திமுகவின் உடைய 30 மாத ஆட்சிக்காலத்தில் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

ஊழல் செய்வதற்காக… கமிஷன் பெறுவதற்காக…. தனியார் நிறுவனங்களுக்கு விவசாய பெருமக்களின் உடைய நிலத்தை தாரை வார்த்து,  அதில் கமிஷன் அடிக்கலாம் என்று யோசிக்கிறார்களே தவிர,  இவர்கள் விவசாயத்தை வளர்ப்பதற்காக இந்த ஆட்சி இல்லை.அதனால் தான் உறுதியாக உங்களுக்கு சொல்லுகிறேன்.. கர்மவீரர் காமராஜர் ஐயா 12 அணை கட்டினார். கால்வாயாக வெட்டி தள்ளினார்… கிராமம் கிராமத்திற்கு தண்ணீர் கொண்டு வந்தார்…

அதன்பிறகு தமிழகத்தில் விவசாயிகளுக்கு யாரும் யாரும் நிற்கவில்லை. இன்றைக்கு இந்தியாவிலே கர்மவீரர் காமராஜர் ஐயாவிற்கு பிறகு விவசாயிகளோடு ஒரு மனிதன் நிற்கிறார் என்றால்,  அது பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மட்டும்தான்,  விவசாயம் செழிக்க வேண்டும் என விவசாயிகள் பக்கம் நிற்கிறார்கள் என தெரிவித்தார்.