“விடுதலை 2” திரைப்படம் சமீபத்தில் டிசம்பர் மாதம் 20ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்தப் படத்தை ரசிகர்கள் பலரும் கொண்டாடி வரும் நிலையில், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் படத்தை குறித்து குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். இது குறித்து அவர் தனது இணையதள பக்கத்தில் கூறியிருப்பதாவது, “விடுதலை 2” படம் நக்சல் தீவிரவாதத்தை ஆதரிப்பதாகவும், அதனை பெருமைப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு “விடுதலை 2” திரைப்பட குழுவினர் விளக்கம் அளிக்க வேண்டும். குறிப்பாக இந்த படத்தை “ரெட் ஜெயன்ட் மூவிஸ்” தயாரிப்பில் வெளியாகியுள்ளது. எனவே ரெட் ஜெயின் மூவிஸ் தயாரிப்பு நிறுவனம் ஆயுதம் ஏந்திய பயங்கரவாதத்தை தமிழகத்தில் ஏற்படுத்துகிறது. எனவே இந்த திரைப்படத்தின் மீது தேசிய புலனாய்வு அமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த திரைப்படத்தை கைதட்டி ரசிக்கும் இளைஞர்கள் நக்சல் தீவிரவாதத்தால் பின்னடைவை சந்தித்த மாநிலங்களை ஒரு முறை பார்க்க வேண்டும். தமிழகத்தில் பல இடங்களில் தின கூலிகளாக பணியாற்றும் வெளிமாநிலத்தவர்கள் அனைவருமே நப்சல் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதை உணர வேண்டும். பாரதத்தின் அடுத்த ரெட் காரிடராக தமிழகத்தை மாற்ற திமுக ஊக்குவிப்பது இதன் மூலம் தெளிவாகத் தெரிகிறது என கூறியுள்ளார்.