
செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் இந்த நீட்டுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு பெருகி வருகிறது. தமிழ்நாட்டிற்கு மட்டும் தான் என்று சொல்லிக் கொண்டிருந்தவர்கள்… ராஜஸ்தானில் ஏறத்தாழ 20 பேர் தற்கொலை செய்து கொண்டார் என்கின்ற செய்தி வருகிறது.
முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரம் ட்விட்டரில் செய்தி போட்டு இருக்கிறார். தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் நீட் தேர்வுக்கு விதி விலக்கு அளிக்கக்கூடிய சட்ட நுணுக்கங்கள் எல்லாம் இருக்கிறது. அதை செய்ய வேண்டும் என்று அவரும் சொல்கிறார். இப்படி ஒவ்வொரு காலகட்டத்திலும் எங்களுக்காக ஆதரவு பெருகுகின்ற நேரத்தில்….
மக்கள் இயக்கமாக மாறுகிற போது…. நிச்சயமாக வெற்றி கிட்டும் என்கின்ற நம்பிக்கையோடு தான் இதைசெய்துள்ளோம்… அண்ணாமலை செய்கின்ற விமர்சனத்திற்கு எல்லாம் பதில் சொல்லி கொண்டு இருக்க முடியாது. ஏனென்றால் அவர் irrelevant ( பொருத்தமற்று ) பேசுவது அவருடைய தொழில்.
உயிரோடு இருக்கிற வீராசாமியை செத்துப் போயிட்டாருன்னு சொன்னாரு. அதே மாதிரி மருதமலை கோவிலுக்கு 1962இல் திமுக EP கனெக்சன் கொடுக்கல என்கிறார். அப்போ திமுக ஆட்சிக்கு வரல. இப்படி irrelevant ( பொருத்தமற்று ) கேட்கிற ஒரு கேள்வி எல்லாம் பதில் சொல்வதை விட ignore ( புறக்கணிக்கணும் ) என தெரிவித்தார்.