
செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், என்னுடைய தம்பி அருள் அவர்கள் முதல் முதலாக தயாரித்த படம் ஜோ. தம்பி ரியோ நடித்திருக்கிறார்கள். புது இயக்குனர் ஹரிஹரன். எங்க ஊர் பரமக்குடி. இதில் எல்லாருமே புது கலைஞர்களாக இருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் விக்னேஷ், விக்கி. இசையமைப்பாளர் சித்து குமார் மட்டும் தான் இரண்டு படங்கள் பண்ணியிருக்கிறார்கள். கலை இயக்குனர், பட தொகுப்பாளர் எல்லாம் புதுசு. ஆனால் புதுசு மாதிரி இல்லை. எல்லாரும் முதிர்ந்த கலைஞர்கள் போல் இந்த படத்தை எடுத்திருக்கிறார்கள்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு நெகிழ்ச்சியான…. உருக்கமான…. காதல் கதையை…. ரொம்ப நேர்த்தியாக எடுத்திருக்கிறார். உரையாடல் எழுதிய விதம்…. காட்சி அமைத்த விதம்… அவ்வளவு இயல்பாக இருக்கிறது. ஒளிப்பதிவு, பாடல்களையும் தாண்டி பின்னணி இசை எல்லாம் ரொம்ப சிறப்பாக இருக்கிறது. காதல் கதையின் என்றதும், கல்லூரியில் படிக்கின்ற பிள்ளைகள் தான் பார்க்கணும்… குடும்பத்தோடு பார்க்கிற மாதிரி அவ்வளவு நேர்த்தியாக, நெகிழ்ச்சியாக சொல்லி இருக்கின்றார்கள். ரொம்ப நாளாக ஆச்சி இந்த மாதிரி படம் பார்த்து….
படம் பார்த்துக்கொண்டு இருக்கும் போது எங்க கல்லூரி காலங்கள் திருப்பி நினைவுக்கு வருவது மாதிரி, செய்து இருக்கிறார்.மிகைப்படுத்தாத நடிப்பு, உரையாடல், திரைக்கதை, கதை மாந்தர்களின் தேர்வு, அவ்வளவு அருமையாக இருக்கிறது. ரொம்ப நல்ல படம். மாபெரும் வெற்றி அடையும், பெரிய வரவேற்பை பெறும். என்னுடைய தம்பி அருளுக்கு, நடித்த தம்பி ரியோவிற்கு… புது முகங்கள் இரண்டு பெண்கள் ரொம்ப அருமையாக செய்திருக்கிறார்கள்…. கூட நடித்த நண்பர்கள் எல்லாம்.. அவ்வளவு இயல்பான முகங்கள், அவ்வளவு இயல்பான நடிப்பு ஆற்றலை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். எல்லாருக்கும் என்னுடைய நிறைந்த அன்பும், வாழ்த்தும் என தெரிவித்தார்.