உலகம் முழுவதும் பல கோடி கணக்கான பயனர்களால் whatsapp பயன்படுத்தப்படுகிறது. இந்த செயலியை ஏராளமானோர் பயன்படுத்துவதால் மெட்டா அடிக்கடி புதுப்புது அப்டேட்டுகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் சமீப காலமாக மெட்டாவுக்கு சொந்தமான instagramல் இருப்பது போன்று வாட்ஸ் அப்பிலும் அப்டேட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக whatsapp-ல் ஸ்டேட்டஸ் வைக்கும் போது அதனை லைக் செய்யும் முறை சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

அந்த வகையில் தற்போது instagram-ல் இருப்பது போன்று‌ whatsapp ஸ்டேட்டஸில் நண்பர்களை மென்ஷன் செய்து கொள்ளும் வகையில் புதிய அம்சத்தை விரைவில் மெட்டா பயன்பாட்டுக்கு கொண்டு வர உள்ளது. இதன் மூலம் நம்முடைய ஸ்டேட்டஸில் மற்றவர்களை Tag செய்யும்போது அவர்களுக்கு நோட்டிபிகேஷன் செல்லும். மேலும் அதனை அவர்களும் கிளிக் செய்து தங்களுடைய ஸ்டேட்டஸில் பகிர்ந்து கொள்ள முடியும். இந்த புதிய அப்டேட் சோதனையில்  இருக்கும் நிலையில் விரைவில் ‌ பயன்பாட்டுக்கு வர உள்ளது