
தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகராக இருப்பவர் ஜூனியர் என்டிஆர். இவர் ராஜமவுலி இயக்கத்தில் நடித்த ஆர்ஆர்ஆர் திரைப்படம் கடந்த வருடம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் இடம்பெற்று இருந்த நாட்டு நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது. இந்நிலையில் நடிகர் ஜூனியர் என்டிஆர் அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
அப்போது ஜூனியர் என்டிஆர் நடந்த சென்று கொண்டிருந்தபோது பவுன்சர்களை தாண்டி ரசிகர் ஒருவர் ஓடி வந்து ஜூனியர் என்டிஆர்-ஐ கண்டுபிடித்தார். உடனே பவுன்சர்கள் ரசிகரை இழுத்தனர். ஆனால் ஜூனியர் என்டிஆர் கோபப்படாமல் அந்த ரசிகர்களிடம் மிகவும் தன்மையாக நடந்து கொண்டார். அந்த ரசிகரின் தோள் மீது கை போட்டு அவருடன் சேர்ந்து புகைப்படமும் எடுத்துக் கொண்டார். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
లవ్ అమ్మ లవ్ ఏమి చేయలేం అంతే …. ❤️🙏🏻@tarak9999 #ManOfMassesNTR pic.twitter.com/J9xjzWhsj4
— WORLD NTR FANS (@worldNTRfans) March 18, 2023