
தர்மபுரி மாவட்டத்தில் மாணவி ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். அவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வரும் நிலையில் மாணவிக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்திருக்கிறார். இதனால் மாணவியின் தாய் அவரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி கர்ப்பமாக இருப்பதாக கூறினார்கள். இந்த தகவல் தருமபுரி குழந்தைகள் காப்பகத்திற்கு தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சில அலுவலர்கள் மாணவியிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின் போது மாணவி வசித்து வரும் பகுதியை சேர்ந்த 3 பேர் ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது.
இதை தொடர்ந்து மாணவியின் தாய் பாலியல் தொல்லை கொடுத்த நபர்களின் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி காவல் துறையினர் நித்திஷ் குமார்(21),வேலன்(27), ஜெய்சங்கர்(30) ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .