
தென்காசி மாவட்டத்தில் உள்ள வாசுதேவநல்லூர் பகுதியில் வசிப்பவர் திருமலைச்சாமி(42). இவருக்கு சசிகலா (34) என்ற மனைவி இருந்துள்ளார். திருமலைச்சாமி- சசிகலா தம்பதியினருக்கு பிரித்திஷா (9) என்ற மகள் உள்ளார். திருமலைச்சாமி அப்பகுதியில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் திருமலைச்சாமிக்கும் சசிகலாவுக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதேபோன்று அக்டோபர் மாதம் 31ஆம் தேதி தீபாவளி அன்று வழக்கம் போல இருவரும் சண்டை போட்டுள்ளனர்.
இதில் வாக்குவாதம் அதிகமாகி திருமலைச்சாமி கம்பால் சசிகலாவை மூர்க்கத்தனமாக அடித்துள்ளார். இதனால் சசிகலா சம்பவ இடத்திலேயே மயங்கியுள்ளார். இது குறித்து அறிந்த அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து சென்ற காவல்துறையினர் சசிகலாவை மீட்டு அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு மேல் சிகிச்சைக்காக சசிகலாவை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு மாற்றியுள்ளனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே சசிகலா பரிதாபமாக இறந்துள்ளார்.
இதனால் அவரது உடலை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். இச்சம்பவம் குறித்து சசிகலாவின் தாயார் திருமலைச்சாமி மீது புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் திருமலைச்சாமி கைது செய்யப்பட்ட சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் இச்சம்பவம் குறித்த விசாரணையில் சசிகலா செயற்கை பல் கட்டி உள்ளதாகவும், திருமலைச்சாமி அடித்ததில் செயற்கை பல் தொண்டையில் சிக்கி இறந்துள்ளதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.