தென்னிந்திய சினிமாவில் பிரபலமாக இருப்பவர் நடிகை சமந்தா. இவர் தனது பேச்சாலும், செயலாலும் இணையதளத்தில் அடிக்கடி மக்களின் மனதை கவர்ந்தவர். அந்த வகையில் தான் தயாரித்த சுபம் என்ற படத்தின் வெற்றி விழாவில் மீண்டும் மக்களின் இதயங்களை கவர்ந்துள்ளார். சுபம் என்ற திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் தான் நடிகை சமந்தா.

இப்படம் கடந்த 9-ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படத்தின் வெற்றி விழா நேற்று நடைபெற்றது. அப்போது நடிகை சமந்தாவின் உதவியாளரான ஆர்யன் மேடையிலேயே கண்கலங்கி உணர்ச்சிவசப்பட்டார். இதையடுத்து உடனடியாக நடிகை அவரை கட்டியணைத்து ஆறுதல் கூறினார். இதைப்பார்த்த ரசிகர்கள் அவரைப் பாராட்டி வருகின்றனர்.