
இங்கிலாந்தில் உள்ள வில்லியம் ஃபார் காம்பிரஹென்சிவ் பள்ளி, கழிவறைகளில் உள்ள அனைத்து கண்ணாடிகளையும் அகற்றியிருப்பது தற்போது விவாதத்திற்குரியதாகியுள்ளது. இதுகுறித்து பள்ளி முதல்வர் கிராண்ட் எட்கர் கூறியதாவது, இதன் காரணமாக, “மாணவர்கள் கழிவறையில் அதிக நேரம் செலவழிக்கின்றனர், மேலும் சிலர் குழுக்களாக கூடுவதால் மற்ற மாணவர்கள் கழிவறையை பயன்படுத்த அவதியடைகின்றனர்” எனக் கூறினார். இந்த முடிவு பெற்றோர்களிடையே கலவையான எதிர்வினைகளை எழுப்பியுள்ளது. சிலர் இதை தேவையற்ற நடவடிக்கை என்று கூறுகின்றனர். ஆனால் பள்ளி நிர்வாகம் punctuality பிரச்சினைகளை சரிசெய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளது.
பள்ளியின் இந்த முடிவை பல பெற்றோர் கடுமையாக விமர்சித்துள்ளனர். “இவை வெறும் கண்ணாடிகள்தான், வீடுகளில் இருக்கும் போது, பள்ளியிலும் ஏன் இருக்கக்கூடாது?” என்று ஒரு பெற்றோர் கூறியுள்ளார். மேலும், மருத்துவ காரணங்களுக்காக கண்ணாடி தேவைப்படுமெனில், மாணவர்கள் அதனை பள்ளியின் ரிசப்ஷனில் கேட்டுப் பெற்றுக்கொள்ளலாம் என்று பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது மாணவர்களின் அடிப்படை சுதந்திரத்தை தடுக்கும் நடவடிக்கை எனவும், குறிப்பாக சிறுவயது மாணவர்களுக்கு தேவையற்ற கட்டுப்பாடு விதிக்கக்கூடாது எனவும் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.