
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் சித்ரா என்பவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் மீது மாணவர்களும், பெற்றோர்களும் பல்வேறு புகார்களை கூறி வந்தனர். பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டால் சித்ரா எந்தவித பதிலும் கூறாமல் அலட்சியமாக இருந்ததாகவும், மாணவர்களை தங்களது சொந்த தேவைக்காக வெளிய அனுப்புவதாகவும், குப்பைகளை மாணவர்களை அகற்றும்படி கூறுவதாகவும் தலைமை ஆசிரியர் மீது புகார் கூறியிருந்தனர்.
நேற்று முன்தினம் திடீரென பெற்றோருடன் மாணவர்கள் பள்ளி முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அறிந்த மாவட்ட இடைநிலை கல்வி அதிகாரி உதயகுமார், திருப்பத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி ஆகியோர் இது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த பிறகு மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது