பெங்களூருவில் 14 வயது சிறுவனுக்கு தன் தந்தையின் கையால் நடந்த ஒரு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூருவை சேர்ந்த ரவிக்குமார் என்பவர் தச்சு தொழிலாளி ஆவார் இவருக்கு தேஜு என்ற ஒரு மகன் உண்டு இவர் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். தேஜு பள்ளியில் படிக்கும்போது தவறான நண்பர்களுடன் சேர்ந்து மது மற்றும் போதை பழக்கத்திற்கு ஆளாகியுள்ளார். தன்மகன் போதை பொருட்களுக்கு அடிமையானதை கண்டு தேஜூவை கண்டித்து உள்ளார். படிக்கும்போது புகைபிடித்தல் மற்றும் குடித்தல் கூடாது என அறிவுறுத்தி உள்ளார். தந்தையின் பேச்சை கேக்காத தேஜு பள்ளிக்கு செல்லாமல் வகுப்பை கட் அடித்து தன் நண்பர்களுடன் வெளியே சென்றுள்ளார்.

இதனை அறிந்த ரவிக்குமார் மகனின் போக்கே மாற்றுமாறு எச்சரித்துள்ளார் ஆனால் தேஜூ இதனை சிறிதும் பொருட்படுத்தவில்லை. இதன் காரணமாக ரவிக்குமார் பழுதில் கிடந்த தேஜுவின் போனை சரி செய்யவோ அல்லது மாற்றவோ மறுத்ததால் தேஜு பள்ளிக்கு செல்வதே முற்றிலுமாக நிறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரவிக்குமார் வெள்ளிக்கிழமை தேஜு பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருப்பதை கண்ட ரவிக்குமார் குடிபோதையில் தேஜுவை கிரிக்கெட் மட்டையால் அடித்து சுவரில் தள்ளி விட்டதாக கூறப்படுகிறது இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் தேஜுவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் செல்லும் வழியிலேயே தேஜு இறந்து விட்டார் பின்னர் அந்த குடும்பத்தினர் உடலை வீட்டிற்கு கொண்டு வந்து இறுதி சடங்குக்கு தயாராகி உள்ளனர். இருப்பினும் அப்பகுதியில் உள்ள மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின் அடிப்படையில் தேஜுவின் வீட்டிற்கு வந்த போலீசார் உடலே பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் விசாரணையில் ரவிக்குமார் ஆத்திரத்தில் மகனைக் கொன்றதாக ஒப்புக்கொண்டார் இதனைத் தொடர்ந்து ரவிக்குமாரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.