
அரியானாவில் டெல்லி அக்ரோ சாலையில் ஆகஸ்ட் 23 அன்று 12வது படிக்கும் ஆர்யா மிஸ்ரா என்ற மாணவன் தனது டஸ்டர் காரில் நண்பர்களுடன் சென்றுள்ளார். அப்போது சிலர் அவருடைய காரை ஆயுதங்களுடன் வழி மறித்துள்ளனர்.
அந்த கும்பல் ஆயுதங்களுடன் மறித்ததும் அந்த மாணவன் பயந்து போய் காரை நிறுத்தாமல் தொடர்ந்து சென்றுள்ளார். அவ்வாறு வழிமறித்த கும்பல் சுமார் 30 கிலோமீட்டர் அந்த காரை துரத்தி சென்று துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இறுதியில் கார் நின்றபோது, காருக்குள் இருந்த கும்பல் பதிலடி கொடுக்கக்கூடும் என்று சந்தேகித்த காவலர்கள் மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். வாகனத்திற்குள் இரு பெண்களை இருந்துள்ளனர் பின்னரே, தாங்கள் செய்த மாபெரும் தவறை உணர்ந்து தாக்குதல் நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த துப்பாக்கி சூட்டில் ஆர்யன் கழுத்தில் குண்டு பாய்ந்தது. உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் ஒரு நாள் கழித்து அவரது காயங்கள் காரணமாக இறந்தார், அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் ஆழ்ந்த அதிர்ச்சியிலும் துக்கத்திலும் இருந்தனர்.
விசாரணையில் அந்த பசு காவலர் குழு உறுப்பினர்களால் மாணவர்களை மாடு கடத்தல்காரர்கள் என்று தவறாக நினைத்து, துப்பாக்கிச் சூடு நடத்தியதால், ஆர்யன் சுட்டுக் கொல்லப்பட்டார். தாக்குதல் நடத்தியவர்கள் அனில் கௌசிக், வருண், கிருஷ்ணா, ஆதேஷ் மற்றும் சவுரப் ஆகியோர் தற்போது போலீஸ் காவலில் உள்ளனர், மேலும் விசாரணை நடந்து வருகிறது.
அந்த பகுதியில் கால்நடைகளை கடத்துபவர்கள் ரெனால்ட் டஸ்டர் மற்றும் டொயோட்டா ஃபார்ச்சூனர் கார்களை விலங்குகளை ஏற்றிச் செல்வதற்கு பயன்படுத்தியதாக கண்காணிப்பு குழுவுக்கு தகவல் கிடைத்ததால் பசு காவலர் குழு உறுப்பினர்களால் தவறாக குறிவைத்து மாணவர் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.