
ஆளுநர் மாளிகை சார்பில் வெளியான செய்தி குறிப்பில் மிக்ஜாம் புயலால் நமது கிழக்கு கடலோர மாவட்டங்களில் சில மோசமாக பாதிக்கப்பட்டன. மேலும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், அத்தியாவசிய சேவைகளை பராமரிக்கும் பணிகளிலும் மத்திய – மாநில அரசு துறைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலைமை மத்திய அரசும் – மாநில அரசும் உயர்மட்ட அளவில் கண்காணித்து வருகின்றன. மாநில அரசின் அறிவுரைகளை மக்கள் பின்பற்றி, நிலைமை சீராகும் வரை வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி வலியுறுத்தி உள்ளார்.
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) December 4, 2023