
ஐபிஎல் இறுதிப்போட்டி நேற்று முன்தினம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிய நிலையில் ஹைதராபாத்தை வீழ்த்தி கொல்கத்தா அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் ஹைதராபாத் அணி விளையாடும் போதெல்லாம் அந்த அணியின் உரிமையாளரான காவியா மாறனின் எக்ஸ்பிரஷனை பார்க்க தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கும். ஆனால் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா வெற்றி பெற்ற போது கைதட்டி காவ்யா மாறன் திடீரென பின்னால் திரும்பி நின்று அழுதார்.
இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகிய நிலையில் ரசிகர்கள் கஷ்டமாக இருக்கிறது என்று பதிவிட்டனர். இந்நிலையில் ஹைதராபாத் அணி தோல்வி அடைந்தது மிகவும் வருத்தமாக இருப்பதாக கூறி பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் காவ்யா மாறனுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஹைதராபாத் அணி தோல்வி அடைந்தது மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. அந்த அணியின் தோல்விக்கு பிறகு உரிமையாளர் காவியா மாறன் உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினார். கேமராக்களில் இருந்து திருப்பி தன் முகத்தை அவர் மறைத்தார். அவருக்காக நான் மிகவும் வருத்தப்படுகிறேன். பரவாயில்லை. நாளை இருக்கிறது மை டியர். மேலும் வருத்தப்பட வேண்டாம் என்று கூறியுள்ளார்.