சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியில் உள்ள பிரபலமான அன்னை சாந்தி உணவகம், Zomato மூலம் விஷ்ணு என்ற வாடிக்கையாளருக்கு மஸ்ரூம் பிரியாணி மற்றும் மஸ்ரூம் கிரேவியை 209 ரூபாய்க்கு அனுப்பிய நிலையில், அந்த கிரேவி கேட்டு போனது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை விஷ்ணு வீட்டில் பிரித்து பார்த்தபோது, உணவு கெட்டுப்போயிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

விஷ்ணு, உணவக உரிமையாளரிடம் இது குறித்து தொலைபேசியில் விளக்கம் கேட்டபோது, “உன்னால் முடிந்ததைச் செய்து கொள்” என்ற கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த விஷ்ணு நேரடியாக அன்னை சாந்தி உணவகத்திற்குச் சென்று கெட்டுப்போன மஸ்ரூம் கிரேவியை காண்பித்தார். அங்கு இருந்த பணியாளர்களும் உணவு கெட்டுப்போனதை உறுதிப்படுத்தினர்.

உரிமையாளர் அங்கு இல்லாததால், மேலாளரிடம் வாக்குவாதம் நடைபெற்றது. இதன் பின்னர் ஊடகங்கள் இந்த சம்பவம் பற்றி பேச தொடங்கிய போது, மேலாளர் உடனடியாக விஷ்ணுவின் பணத்தை G Pay மூலம் திருப்பி அனுப்பினார். இது போன்ற தவறுகள் இனி ஏற்படாது என உணவக நிர்வாகம் தெரிவித்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.